டெல்லி கார் வெடிப்பு சம்பவம் விசாரணை தீவிரம்

 

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று மாலை காரொன்று திடீரென வெடித்துச் சிதறியது.

இதன் காரணமாக அருகில் இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.

குறித்த சம்பவத்தில் சுமார் 10 பேர் வரையில் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, அப்பகுதி முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை என்.ஐ.ஏ விசாரிக்க உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.