
டெல்லியை தொடர்ந்து பீகாரில் நில அதிர்வு!
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று திங்கட்கிழமை அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டிருந்த நிலையில் , இன்று காலை பீகார் மாநிலத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வு 4.0 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.
இன்று காலை 8.02 மணியளவில் பீகார் மாநிலத்தின் சிவான் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக இந்தியாவின் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.