
டெலிகிராம் செயலிக்குத் தடை?
டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகிவருகின்றன.
நிதி மோசடி உள்ளிட்ட பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கு டெலிகிராம் செயலி அதிகளவில் உதவுவதால் குறித்த செயலிக்குத் தடை விதிக்க வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக டெலிகிராம் நிறுவனத்தின் சி.இ.ஓ பிரான்ஸ் பொலிஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
