டெங்கை கட்டுப்படுத்த புகை விசிறல்
-மூதூர் நிருபர்-
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள அல்லைநகர் கிழக்குப் பகுதியில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான புகை விசிறும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் டெங்கு நோயாளர்கள் பலர் இனம் காணப்பட்டதை அடுத்து டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கான விழிப்புணர்வு, சிரமதானம், புகை விசிறல் உள்ளிட்ட பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்