
டெங்கு நோயினால் 9 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி மேல் மாகாணத்தில் இதுவரை 9,675 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த ஆண்டு டெங்கு நோயினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
