டெங்கு குடம்பிகளின் சதவீதம் அதிகரிப்பு
பாடசாலைகளில் டெங்கு குடம்பிகளின் சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கர, ஆய்வு செய்யப்பட்ட பாடசாலைகளில் 40 சதவீதத்தில் தற்போது டெங்கு குடம்பிகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நிலையங்களில் புகைமூட்டம் அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
