டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

-மூதூர் நிருபர்-

க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தூய்மையான நகரம் – ஆரோக்கியமான வாழ்கை எனும் தலைப்பில் பேரிடருக்குப் பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான மூன்று நாள் தேசிய வேலைத்திட்டம் நேற்று புதன்கிழமை நாடாளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் தொடர் இரண்டாவது நாளாக மூதூர் பிரதேச சபை மற்றும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூதூர் வலயக் கல்வி அலுவலகம் இணைந்து இன்று வியாழக்கிழமை காலை 8:30 மணிக்கு பாடசாலைகள், வீடுகளில் டெங்கு ஒழிப்பு பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை விடுட்ப்பட்டதோடு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்படுத்தலின் கீழ் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.