டீசல் பதுக்கி வைத்திருந்த ஒருவர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது

அம்பாறையில் சட்டவிரோதமாக டீசல் பதுக்கி வைத்திருந்த ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – பள்ளிக்குடியிருப்பு பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,000 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.