டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெறுவதாக மிட்செல் ஸ்டார்க் அறிவிப்பு

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc), சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துளார்.

2026 டி20 உலக கிண்ணத்துக்கான நியூசிலாந்து சுற்றுப்பயண அணி அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்டார்க்கின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இருபதுக்கு 20 போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் மிட்செல் ஸ்டார்க் ஆவார்.

இதேவேளை டெஸ்ட் போட்டிகள், 2027 ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளை மையப்படுத்தி அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.