டி20 தொடரையும் கைப்பற்றுமா இலங்கை

 

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டி ஹராரே விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.