டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு நேபாளம்- ஓமன் தகுதி
ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த தகுதிச் சுற்றில் நேபாளம் மற்றும் ஓமன் ஆகிய இரு அணிகளும் 2026 ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
அவர்களது இறுதி சூப்பர் சிக்ஸ் போட்டிக்கு முன்பே 18-வது மற்றும் 19-வது அணிகளாக தகுதி பெற்றுள்ளன.