டிரம்பிற்கு அளித்த வாக்குறுதியை ரஷ்ய ஜனாதிபதி மீறியதாக செலென்ஸ்கி குற்றச்சாட்டு

எரிசக்தி இலக்குகளைத் தாக்குவதன் மூலம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அளித்த வாக்குறுதியை மீறியதாக யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் புதிய தாக்குதல்கள் மூலம் விளாடிமிர் புட்டின் வழங்கிய வாக்குறுதிகளை மீறியுள்ளமை நன்கு புலப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

30 நாட்களுக்கு அத்தகைய இலக்குகளைத் தவிர்ப்பதாக விளாடிமிர் புட்டினின் உறுதிமொழி அளித்தபோதிலும், ரஷ்யா எரிசக்தி வசதிகளைத் தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகமும் யுக்ரைனின் எண்ணெய் சேமிப்பு வசதிகளில் ஒன்றை குறிவைத்ததாக குற்றம் சாட்டுகிறது.

டொனால்ட் ட்ரம்புடனான தொலைபேசி அழைப்பின் போது விளாடிமிர் புட்டின் முழு போர்நிறுத்தத்தை நிராகரித்தார் எனவும் அழைப்பு பற்றிய விபரங்களை அறிய அமெரிக்க ஜனாதிபதியிடம் பின்னர் கலந்துரையாடுவதாகவும் செலென்ஸ்கி கூறியிருந்தார்.

யுக்ரைன் குறித்த பேச்சுவார்த்தைகள் ஞாயிற்றுக்கிழமை தொடரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.