டிப்ளோமா ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு ஆளுநர் பரிந்துரை

டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறை சேரியின் செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா எச்.என்.டி.இ (HNDE) கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறை சேரியின் செயலாளருக்கும் இடையில் நேற்று புதன் கிழமை கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, எச்.என்.டி.இ டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ளவர்களுக்கு நியமனம் வழங்குமாறு திறைசேரிக்கு செந்தில் தொண்டமான் பரிந்துரை விடுத்துள்ளார்.