டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு கால்நடை தீவனம் வழங்கி வைப்பு
-கிளிநொச்சி நிருபர்-
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு கால்நடை தீவனம் வழங்கி வைக்கப்பட்டது.
விவசாய அமைச்சின் நிதியுதவியில் வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தின் ஏற்பாட்டில், வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் உள்ள கால்நடை பண்ணையாளர்களுக்கு, இருவாரங்களுக்கு தேவையான தீவனம் வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில், கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அலுவலகத்திற்குற்பட்ட, 160 உள்ளக வளர்ப்பு மற்றும் அரை உள்ளக வளர்ப்பில், மாடு வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களுக்கு தீவனம் வழங்கி வைக்கப்பட்டது.
ஒரு பண்ணையாளருக்கு 50 கிலோ கிராம் தீவனம் வழங்கி வைக்கப்பட்டது.




