
டிட்வா புயலின் சேத மதிப்பீடு – உலக வங்கி அறிக்கை!
உலக வங்கியின் தர அறிக்கையின்படி, டிட்வா புயலால் இலங்கைக்கு ஏற்பட்ட மொத்த சேதம் அமெரிக்க டொலர் 4.1 பில்லியன் ஆகும்.
இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 4% ஆகும்.
25 மாவட்டங்களில் 20 இலட்சம் மக்களும் 5 லட்சம் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் அதிக சேதமாக 689 மில்லியன் டொலர் பதிவாகியுள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
உள்கட்டமைப்பு, குடியிருப்புகள், விவசாயம் மற்றும் வர்த்தக கட்டடங்கள் என அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

