
டிட்வா சூறாவளி கொடுப்பனவுகள் ஆரம்பம் – பிமல் ரத்நாயக்க
டிட்வா சூறாவளியினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா கொடுப்பனவை, ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அத்துடன், அனர்த்தம் இடம்பெற்று ஒரு மாதம் கடப்பதற்கு முன்னர் சேதமடைந்த வீதிகளில் 99 சதவீதமானவற்றை புனரமைக்க தமது அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வீடுகளை முற்றாக இழந்தவர்கள் ஒரு வருடம் நிறைவடைவதற்குள் தமக்கான வீட்டை அமைத்துக்கொள்ள உதவுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் விவசாயிகளும் தமக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈடு இதுவரை உரிய முறையில் கிடைக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.
