டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை அதிதீவிர சிகிச்சையில் உள்ளார் : அறிக்கை மீளப்பெற்ற பொலிசார்

மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் பகுதியில் வைத்து இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் சமூக செயற்பாட்டாளர் டான் பிரியச ((வயது-39)) உயிரிழந்ததாக வெளியிட்ட அறிக்கை மீளப் பெற்றுள்ளது.

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஆரம்பத்தில் துப்பாக்கி பிரயோகத்தில் அவரது மரணத்தை உறுதிப்படுத்திய போதிலும், அடுத்தடுத்த வெளியீடுகளில் பிரியசாத் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

டான் பிரியசாத்தின் மரணத்தை அறிவித்து முன்னதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிடப்பட்ட அறிக்கை

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க