டயனா கமகேவுக்கு எதிரான மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதியரசர்கள் ஆயத்தின் பூரண உடன்பாட்டுடன் குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வெலிகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜெயவிக்ரமவினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்