ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்
💢பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க நினைவாற்றல் குறைவது இயல்பு. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இதற்கு நேர்மாறாக இருக்கிறது பலர் சிறு வயதிலேயே ஞாபக மறதி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான உடல் மற்றும் மன உளைச்சல். இது உடல் மற்றும் மனதை கணிசமாக பாதிக்கும் நிலையில் இதன் தாக்கம் நினைவாற்றலில் எதிரொலிக்கிறது. அதே போல இந்த பிரச்சனைகளுக்கு உணவு பழக்கமும் காரணம். இன்றைய தலைமுறையினரிடம் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் என்பது வெகு குறைவாகவே உள்ளது.
💢சத்தான உணவுகளை தங்கள் டயட்டில் சேர்ப்பதை விட்டுவிட்டு பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாடி செல்கின்றனர். இந்த பழக்கமும் கூட இளைய தலைமுறையினரிடையே நினைவாற்றல் படிப்படியாக குறைந்து வர காரணமாக இருக்கிறது. உணவு வழக்கத்தில் சில ஆரோக்கிய மாற்றங்களை செய்வதன் மூலம் நினைவாற்றலை சிறப்பாக வைத்திருக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். அந்த வகையில் மோசமான நினைவாற்றலால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால் கீழ்வரும் உணவுகளை உங்கள் டயட்டில் அடிக்கடி சேர்த்து கொள்வதன் மூலம் நிவாரணம் பெறலாம். அது என்ன உணவுகள் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
🔷தினமும் காலை 5 கிராம் ஊறவைத்த பாதாம் பருப்புடன் 5 கிராம் சர்க்கரை மற்றும் பெருஞ்சீரகம் பொடி கலந்த பாலை இளஞ்சூட்டில் பருக ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தினசரி இந்த பாலை குடித்து வந்தால் நினைவாற்றல் மற்றும் கண்பார்வை அதிகரிக்கும். ஒருவேளை உங்களுக்கு பாலுடன் சாப்பிட விருப்பம் இல்லை என்றால் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைத்து வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.
🔷நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே அடிக்கடி நெல்லிக்காய் சாப்பிட்டு வருவது நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமல்ல நினைவாற்றலையும் அதிகரிக்க உதவுகிறது.
🔷மூளையில் உள்ள நரம்புகளுக்கு ஆப்பிள் மிகவும் நன்மை பயக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே தினசரி உணவு எடுத்து கொள்வதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன் ஒரு ஆப்பிள் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டு வர நினைவாற்றல் அதிகரிக்கும் மேலும், தலைவலி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சரும அழகை அதிகரிக்கவும் ஆப்பிள் உதவுகிறது.
🔷பொதுவாக பலரும் முளைகட்டிய கோதுமை மற்றும் பருப்பு வகைகள் சாலட் வடிவில் உணவுக்கு சிறிது நேரத்திற்கு முன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த சால்ட்டில் வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் உப்பு, மிளகாய், எலுமிச்சை சாறு ஆகியவற்றையும் கலந்து சாப்பிட்டால் சுவை அதிகரிக்கும்.
🔷தேவையான அளவு பெருஞ்சீரகத்தை எடுத்து அரைத்து கொண்டு, அதோடு சம அளவு சர்க்கரை அல்லது கேண்டி கலந்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் தினமும் காலையில் ஒரு ஸ்பூன் பால் அல்லது தண்ணீருடன் இதனை கலந்து பருகி வாருங்கள்.
🔷கருப்பு மிளகு மற்றும் வால்நட்ஸ் போன்றவையும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகின்றன. நினைவாற்றல் பாதிக்கப்படாமல் இருக்க எப்போதுமே மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். தினமும் காலையில் பச்சை புல்லில் வெறுங்காலுடன் நடப்பது மனதை அமைதிப்படுத்துகிறது. மேலும் தியானம் மற்றும் யோகாவும் மனதை அமைதியாக வைத்து கொள்ள உதவுகின்றன.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்