
ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கெதிரான மனு விசாரணை திகதி அறிவிப்பு
கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கோட்டை நீதிவான் திலின கமகே இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
தேசிய பலசேனா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, குர்ஆன் மற்றும் இஸ்லாம் மார்க்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் போலியான தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மன்றில் முன்னிலையாகாத 5ஆவது சந்தேகநபருக்கு இன்று பிடியானை பிறப்பிக்கப்பட்டது.
