ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழக்கு : விசாரணைக்கான திகதி ஒத்திவைப்பு

வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை சதொச ஊழியர்களை அவர்களின் உத்தியோகப்பூர்வ கடமைகளிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று புதன்கிழமை கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தின் நீதிபதி நவரட்ண மாரசிங்க முன்னிலையில் ,இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்க்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன

சதொச ஊழியர்களை அவர்களின் உத்தியோகப்பூர்வ கடமைகளிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அவரது ஒருங்கிணைப்பு செயலாளர்களில் ஒருவரான மொஹமட் சாகீர் ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.