ஜேர்மனியில் கத்திக்குத்து: 15 வயது சிறுவன் கைது

ஜேர்மனியின் மேற்கு நகரான சோலிங்கனில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

நகரத்தின் 650ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்களின்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவரவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்