ஜெர்மனியில் பொதுமக்கள் மீது மோதிய கார் : இருவர் பலி, 25 பேர் காயம்!
மேற்கு ஜெர்மனியின் மன்ஹெய்ம் நகரத்தில், பொதுமக்கள் மீது காரொன்று மோதியதில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 25 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மன்ஹெய்ம் நகரில் இடம்பெற்ற கொண்டாட்டமொன்றின்போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டதாக, அந்த நாட்டின் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து, நகர மையத்திலிருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விபத்து தற்செயலானது அல்லது வேண்டுமென்றே காரினால் மக்கள் மோதப்பட்டனரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.