ஜெயலத் சுத்தாவின் கூட்டாளி கைது

திட்டமிட்ட குற்ற செயலில் ஈடுபடும் கும்பல் தலைவன் ஜெயலத் சுத்தா என்கிற ராஜூவின் கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

மெட்டியகொட – மஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் பொடி ஷன் (வயது – 25) என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மெட்டியகொட – லெவ்துவ சந்தி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் டிப்பர் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.