ஜெனீவா செல்கிறார் அலி சப்ரி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 7ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
இந்த அமர்வின் நிறைவாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான அலி சப்ரி ஜெனீவா செல்லவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் கனடா, ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்துள்ள தீர்மான வரைபு நாளை விவாதிக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
