ஜூலி சங் இலங்கையிலிருந்து வெளியேறுவதை பாற்சோறு சாப்பிட்டு கொண்டாடிய உதய கம்மன்பில

பதவிக்காலம் முடிந்து அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையிலிருந்து வெளியேறுவதை, பாற்சோறு சாப்பிட்டு கொண்டாடிய உதய கம்மன்பில

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில, அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் பதவிக்காலம் முடிந்ததை, “இலங்கையின் மீது கடந்த 4 வருடங்களாக இருந்த சாபம் நீங்குகிறது” என வர்ணித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட உதய கம்மன்பில, அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை ஒரு “சாபம்” என்று குறிப்பிட்டார். மேலும் அவர் இலங்கையை விட்டு வெளியேறுவதை, பாற்சோறு சாப்பிட்டு கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

“ஜூலி சங் தனது பதவியை இழக்கிறார், அதை நாடு முழுவதும் பாற்சோறு சாப்பிட்டு கொண்டாட வேண்டும்” என தெரிவித்த அவர், ஊடகவியலாளர் சந்திப்பில் பாற்சோறை எடுத்து சாப்பிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.