ஜூன் 8 சர்வதேச சமுத்திர தினம்

இன்று வியாழக்கிழமை ”மாற்றமடையும் புவியின் சமுத்திரங்கள்” என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் சர்வதேச சமுத்திர தினம் இவ்வருடம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

பூமிக்கு தேவைப்படும் 50 வீத ஒட்சிசனை சமுத்திரங்களே உற்பத்தி செய்கின்றன.

சமுத்திரங்கள், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான புரத உணவுக்கான முக்கிய ஆதாரமாகவுள்ளது.

அளவில்லா வளங்களை எமக்கு அள்ளி வழங்கும் சமுத்திரம் இன்று, ஆபத்தான நிலையில் இருக்கின்றது

பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் சமுத்திரங்களுக்கு விடுவிப்பதால், இன்று சமுத்திரத்தில் வாழும் உயிரினங்களும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன.

உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 8.8 மில்லியன் தொன் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் சமுத்திரங்களில் விடுவிக்கப்படுவதுடன் அதில் SEA OF SRI LANKA எனும் கடற்பிராந்தியத்தில் வருடாந்தம் 0.24 – 0.64 மில்லியன் தொன் பிளாஸ்ட்டிக் பொருட்கள் விடுவிக்கப்படுகின்றன.

எமக்கு உயிர் வாழ்வதற்கு ஆதாரமாய் இருக்கும் சமுத்திரத்தைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.