இலங்கையின் இரண்டு முறை Under-19 ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியனும், ஆசிய Under-19 தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ளவருமான மதீஷா விஜேசேகரவை Würth Lanka நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் பிராண்ட் அம்பாசிடர்(Executive Brand Ambassador) ஆக நியமித்துள்ளது.
இந்த கூட்டாண்மையின் மூலம் மதீஷாவின் விளையாட்டு திறமைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் அவரது விளையாட்டு பயணத்திற்கு ஆதரவளிப்பதற்கும் Würth Lanka முன்வந்துள்ளது. Würth Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்/CEO சுரங்க கெகுல்வலேஜ், இலங்கையின் வளர்ந்து வரும் இளம் விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான மதீஷாவுக்கு ஆதரவளிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
18 வயதான மதீஷா விஜேசேகர, Royal College மாணவராக இருப்பதுடன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் நடைபெற்ற Asian Junior Super Series போட்டிகளில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி ஆசிய Under-19 தரவரிசையில் 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த அனுசரணை, இலங்கையின் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் Würth Lanka நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகும்.










