
ஜீவன் தொண்டமானுக்கு எதிரான வழக்கின் விசாரணை ஒத்தி வைப்பு!
களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்துக்குக் கீழ் இயங்கும் பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சுமத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் உட்பட்டவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் பழனி சக்திவேல், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ், நுவரெலியா மாநகர சபையின் பிரதி நகர முதல்வர் சிவன்ஜோதி யோகராஜா, மற்றும் உடரதல்ல தோட்டத் தொழிலாளர்கள் உள்ளடங்களாக 10 சந்தேக நபர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்ட சிசிடிவி காணொளிகளைப் பரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை, ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது
