ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டேன்: ட்ரம்ப்

தென்னாப்பிரிக்காவில் நவம்பர் இறுதியில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன்படி தனக்கு பதிலாக துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 22,23 ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இந்த உச்சி மாநாடு, முதல் முறையாக ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.