ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி செயலை பாராட்டும் ரசிகர்கள்

சமீபத்தில் விவாகரத்து பெற்ற கோலிவுட் ஜோடியான ஜி.வி.பிரகாஷ் குமாரும் சைந்தவியும் மலேசியாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் தொழில் ரீதியாக மீண்டும் இணைந்தனர். இதன் போது அவர்கள் மகளிற்காக செய்த செயல் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

கோலிவுட்டில் மிகவும்பரபலமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.

இவர்கள் இருவரும் தங்களின் தொழில் ரீதியாக சமீபத்தில் மலேசியாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் இணைந்தனர்.இந்த நி

கழ்ச்சி ரசிகர்களை கவர்ந்தது. இவர்கள் பிரிந்ததன் பின்னர் ஒன்றாக சேர்ந்த நிகழ்ச்சி இது ஒன்றுதான்.

இந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில்  ‘ஆடுகளம்’ பாடலை ஜி.வி.பிரகாஷ் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தபோது சைந்தவி அவர்களின் மகள் ஆன்வியை மேடைக்கு அனுப்புகிறார்.

ஜி. வி தன் மகளையும் கவனமாக பார்த்துககொண்டு பாடலையும் பாடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவர்கள் விவாகரத்துக்குப் பிறகும் நல்ல பெற்றோராக தொடர்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.