ஜா – எல துப்பாக்கிச் சூடு : காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ஜா – எல, மாகோவிட்ட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவராவார்.

கடந்த 6ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் குறித்த பகுதிக்குப் பிரவேசித்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்