ஜம்மு – காஷ்மீரில் மண்சரிவு: 5 பேர் பலி

ஜம்மு – காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவு சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த சம்பவத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழை காரணமாக ஜம்மு – காஷ்மீரின் ரியாசி மாவட்டத்திற்குட்பட்ட கத்ரா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.

இந்த மண்சரிவில் சிக்கியதாக இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் தொடர் மழை மற்றும் மண்சரிவு காரணமாக ஜம்மு – காஷ்மீரில் 18 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.