ஜப்பான் மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை

ஜப்பானின் மேற்கு கடலோர பகுதியில் அமைந்திருக்கும் இஷிகவா, நீகாட்டா, டோயாமா, நகானோ ஆகிய பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசின் செய்தித்தொடர்பாளரான யோசிமாஷா ஹயாஷி, உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் மேலும் நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளதாகவும், மக்கள் அதற்கேற்றார் போல் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்

உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு பிறகு மத்திய ஜப்பானின் இந்த பகுதிகளில் 50 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக 7.6 என்ற அளவில் ரிக்டர் ஸ்கேலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.