
ஜப்பான் அவசர நிதியுதவி!
இலங்கையில் நிலவிய சூறாவளி மற்றும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஜப்பானிய அரசாங்கம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளது.
இந்த நிதியுதவியானது சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பு, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் ஊடாக இலங்கைக்குப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
அதிக பாதிப்புக்குள்ளான கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள மக்களுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இடம்பெயர்வு முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுகளை கொள்வனவு செய்ய முடியும்.
அத்துடன், கண்டி, பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்குமிட வசதிகள், சமையல் உபகரணங்கள் மற்றும் படுக்கை வசதிகளை வழங்க ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது.
