ஜப்பானில் வாடகை நண்பர் சேவையில் ஈடுபடும் இளைஞன்

வாடகைக்கு நண்பராகச் செல்கின்ற இளைஞர் ஒருவர் வருடத்துக்கு இந்திய மதிப்பில் 69 இலட்சம் ரூபாய் வருமானத்தைப் பெற்று வருகின்றார்.

ஜப்பானைச் சேர்ந்த ஜோஷி மோரி மோட்டோ என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு எந்த வேலைக்கும் செல்லாத நிலையில், தனிமையில் இருப்பவர்களுக்குத் துணையாக அதாவது வாடகைக்கு நண்பராகச் செல்வதனைத் தொழிலாகச் செய்து அதிகளவான வருமானத்தையும் பெற்று வருகின்றார்.

தனிமையில் இருப்பவர்களுக்குத் துணையாக உரையாடும் நண்பராக அவர் வாடகைக்குச் செல்வதனால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

மேலும், ஒருவர் வீட்டைச் சுத்தம் செய்யும் போது பேச்சுத் துணையாக செல்வது, வீடியோ அழைப்பில் வாடிக்கையாளர்களுடன் பேசுவது, இசை நிகழ்ச்சிக்குவாடிக்கையாளர்களுக்குத் துணையாக நண்பராகச் செல்வது போன்ற சேவைகளை செய்து வருகின்றார்.

ஆனால் அதே நேரத்தில், அவர் பாலியல் செயற்பாடுகள் மற்றும் காதல் செயற்பாடுகளுக்குத் துணையாக ஒருபோதும் சென்றதில்லை.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில் ,

“அதிக வெயிலில் நிற்பது, குளிரில் பல மணி நேரம் நிற்பது போன்ற கடினமான சூழலையும் நான் சந்தித்துள்ளேன். இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு இந்திய மதிப்பில் 17,000 ரூபாவை கட்டணமாக பெற்று வருகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்