ஜப்பானில் மேலும் 1000 இலங்கையர்களுக்கு வேலை

ஜப்பானில் தாதியர்களாக கடமையாற்ற 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்க ஜப்பானிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று உத்தரவாதம் அளித்துள்ளது.

ஜப்பானுக்கு சென்றுள்ள அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் குறித்த நிறுவனம் ஆயிரம் வேலைவாப்பிற்கான சான்றிதழை கையளித்து உத்தரவாதம் அளித்துள்ளது.

அத்துடன், இந்த வருட இறுதிக்குள் இலங்கையிலிருந்து 150 தாதியர்களை பணிக்கு அமர்த்துவதற்கும் ஜீ ரீ என் (GTN – Global Trust Network)என்ற வெளிநாட்டு வேலைவாய்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

ஜப்பானில் தாதியர்களாக கடமையாற்றுவதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஆஷு மாரசிங்கவினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (பயிற்சி) செனரத் யாப்பா மற்றும் சர்வதேச உறவுகள் ஆலோசகர் ஷான் யஹம்பத் ஆகியோர் கலந்துகொண்டனர்.