ஜப்பானில் பதிவான நிலநடுக்கம்: சேதங்கள் இன்னும் கணிக்கபடவில்லை

ஜப்பானின் நோட்டோ தீபகற்பத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது மிகவும் கடுமையானதாகவும் கடற்கரையோரத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கட்டிடங்களை வீழ்த்தியதுடன் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களுக்கு, ஜப்பான் கடலோரப் பகுதியில் ஐந்து மீட்டர் வரை சுனாமிகள் தாக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்களை தங்கள் வீடுகளை விட்டு உயரமான பகுதிகளுக்குச் செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை தற்போது கடந்து விட்டதாகவும் வடமேற்கு கடற்கரையின் பெரும்பகுதிக்கு விடப்பட்ட கடுமையான சுனாமி எச்சரிக்கை இப்போது குறைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த நில அதிர்வில் பழைய வீடுகள் இடிந்துள்ளதாகவும் சாலைகள் கிழிவெடித்துள்ளதாகவும் பாலங்கள் மற்றும் ரயில் பாதைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிலர் சிக்கியுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் இப்போது இரவு வேளை என்பதால் சேதங்களை கணிக்க முடியவில்லை என தகவல் வெளிவந்துள்ளது.