
ஜப்பானில் நிலவும் சீரற்ற வானிலை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஜப்பானில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஜப்பானின் தென்மேற்குப் பகுதியை ஷன்ஷான் சூறாவளி தாக்கியது.
இதன் காரணமாக மணித்தியாலத்திற்கு 252 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன், பலத்த மழை பெய்த நிலையில், பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
