
ஜப்பானில் நிலநடுக்கம் – 3 தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.
இதனால் ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாட் ஆகிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசிபிக் கடற்கரையில் மூன்று மீற்றர் உயர அலைகள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
