ஜப்பானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் நிலநடுக்கத்தினால் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் மத்தியப் பகுதியில் கடந்த முதலாம் திகதி 7.6 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.

இதனையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று குறித்த சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டது

நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டெடுப்பதற்கு மீட்புக்குழுவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.