ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் நிர்மாணத் துறையில் தொழில்நுட்ப பயிற்சியாளர்களாக இலங்கை ஆண்களுக்கு வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜப்பானின் சர்வதேச உறவுகள் அமைப்பு (IRO) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட ஆட்சேர்ப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த வேலை வாய்ப்பு விளம்பரப்படுத்தப்படுகிறது.

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மார்ச் 09, 2024 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விண்ணப்பங்களை febiro@slbfe.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அதேவேளை 0112 882235 என்ற ஹாட்லைன் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளலாம்.