ஜப்பானில் அடுத்தடுத்து இருமுறை பாரிய நிலநடுக்கங்கள்

ஜப்பானில் கிழக்குப்பகுதி மற்றும் டோக்கியோவில் இன்று சனிக்கிழமை 5.3 ரிக்டர் அளவிலான நலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஜப்பானில் மேற்கு பகுதியில் பாரிய நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு நாள் கழித்து இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் தலைநகருக்கு தெற்கே உள்ள கனகாவா மாகாணத்தில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இருந்ததாக ஜப்பான் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

டோக்கியோ மற்றும் கனகாவா, சைதாமா, யமனாஷி மற்றும் ஷிசுவோகா மாகாணங்களில் வசிப்பவர்களுக்கு அரசாங்கம் வலுவான பூகம்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.

எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை

இதேவேளை, கடந்த வியாழக்கிழமை ஜப்பானின் தென்மேற்கில் கியூஷு பகுதியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், அதன்பிறகு 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்