ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் சனே தகைச்சி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக ஜப்பானின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் சனே தகைச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பின் மூலம், ஜப்பானின் முதல் பெண் பிரதமராக அவர் பதவியேற்கிறார்.

64 வயதான தகைச்சி, முன்னதாக பொருளாதார மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்

கடும் போட்டிக்கு மத்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறி, அரசாங்கத்தின் உயர் பதவிகளில் பணியாற்றிய சனே டகாய்ச்சி, தன்னுடன் போட்டியிட்ட 4 வேட்பாளர்களையும் தோற்கடித்து ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பதவியை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.