ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவி

இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர மனிதாபிமான உதவியாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா தெரிவித்துள்ளார்.

மே மாதம், 3 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால உதவித்தொகை ஏற்கனவே வழங்கப்பட்டது.

இருப்பினும், மேலதிகமாக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.