ஜன நாயகன் திரைப்படம் குறித்து எச்.வினோத் கொடுத்துள்ள அப்டேட்

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’.

குறித்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில் இயக்குநர் எச்.வினோத் சமீபத்தில் இத்திரைப்படம் குறித்து சில சுவாரசிய விடயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் “நடிகர் விஜய்க்கு இத்திரைப்படம் சிறந்த பிரியாவியை தரக்கூடிய திரைப்படமாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ரசிகர்களுக்கு COMPLETE MEALS-ஆக ஜன நாயகன் திரைப்படம் இருக்கும் என இயக்குநர் எச்.வினோத் கூறியுள்ளார்.