‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் கேமியோ: உறுதிப்படுத்தினார் லோகேஷ் கனகராஜ்!

நடிகர் விஜய்யின் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் தான் நடித்துள்ளதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், “வினோத் அண்ணாவும், விஜய் அண்ணாவும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் கேமியோ செய்ய அழைத்தார்கள்.. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்” எனக் கூறி படத்தில் நடித்திருப்பதை உறுதி செய்தார்.

லோகேஷ் கனகராஜுடன் சேர்த்து, இயக்குநர்கள் அட்லி மற்றும் நெல்சன் ஆகியோரும் இப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் திகதி வெளியாக வேண்டிய இத்திரைப்படம், சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் இன்னும் வெளியாகவில்லை.

விஜய் – ஹெச். வினோத் கூட்டணியுடன் முன்னணி இயக்குநர்களும் இணைந்துள்ளதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.