ஜனாதிபதி வேட்பாளர் மனைவியிடமிருந்து தன்னை பாதுகாக்க பாதுகாப்பை கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, சில வேட்பாளர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் ஏற்றுக்கொள்ள முடியாத வினோதமான கோரிக்கைகளைக் முன்வைத்துள்ளனர் , அவற்றில் சில நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரரைக் கோரியுள்ளார் ஆனால் குறிப்பிட்ட வேட்பாளருக்கு எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் இல்லாத காரணத்தால் இக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மற்றுமோர் ஜனாதிபதி வேட்பாளர் தனது மனைவியுடன் வசிக்காது பிரிந்து வாழும் நிலையில், தனது மனைவியிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி உரிய பாதுகாப்பை கோரியுள்ளார்.

எதிர்வரும் தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் சில புதிய ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் அண்மையில் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.

இந்தநிலையில் சில புதிய ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் வினோதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக, தெரியவருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்