ஜனாதிபதி வெளியிடவுள்ள விசேட அறிக்கை
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நிலை மற்றும் சர்வதேச ஆதரவு தொடர்பில் ஜனாதிபதி இந்த விசேட அறிக்கையை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அறிக்கையின் அடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற விவாதத்தை வழங்குவதற்கு அவர்கள் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
