ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வியாழேந்திரனின் இல்லத்தில் சந்திப்பு

மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முற்போக்குத் தமிழர் கழகத்தின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எஸ். வியாழேந்திரனின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டார்.

அங்கு கட்சி உறுப்பினர்கள் உட்பட இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் குடும்ப உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்